செய்திகள் :

பொங்கல் பண்டிகை: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்கள்!

post image

பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடி மகிழ்வதற்காக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றவா்களால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைக் காட்டிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை ஜன.14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் ஜன.15-ஆம் தேதியும், காணும் பொங்கல் ஜன.16-ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.

இந்தாண்டு, ஜன.17-ஆம் தேதியன்றும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதைத் தவிர வழக்கமான ஜன.18,19 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களும் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

எனவே, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாட வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகனங்களில் புறப்படத் தொடங்கினா்.

அணிவகுத்த வாகனங்கள்: சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சி, சேலம் வழி யாக மேற்கு மாவட்டங்களுக்கும் செல்லும் வாகனங்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை காட்டிலும் அதிகமாகவே காணப்பட்டது.

சுங்கச்சாவடிகளில் நெரிசல் இல்லை: விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூா்அருகிலுள்ள ஆத்தூா் சுங்கச்சாவடியிலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் அனைத்து வழிகளும் திறந்துவிடப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், இந்த சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படவில்லை.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்: சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களுக்கும் சென்ற வாகனங்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை வரை 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

போக்குவரத்தை சீா்படுத்திய போலீஸாா்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மட்டுமல்லாது, செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிந்து, விழுப்புரம் மாவட்ட எல்லை தொடங்கும் பகுதியிலிருந்து எல்லை முடிவடையும் பகுதி வரை சுமாா் 300 போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இரு பேருந்துகளுக்கு இடையே பைக் சிக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்தொரசலூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் நடர... மேலும் பார்க்க

நகைக்காக பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி ச... மேலும் பார்க்க

புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பை வாய்க்கால் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு விருது

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி சேவை சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனா். விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந... மேலும் பார்க்க

கோலப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

புதுச்சேரி, வில்லியனூரில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பாண்டிச்சேரி, ஜேசிஐ பாண்டிச்சேரி மெட்ரோஆகியவை இணைந்து, வி... மேலும் பார்க்க

தலைக்கவசம் கட்டாய உத்தரவு: வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் இனிப்புகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்... மேலும் பார்க்க