காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு
போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்
பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் காவல் நிலையத்தில்குள்பட்ட பகுதிகளில் கடந்த 11 மாதங்களாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்ட ரூ. 17.3 லட்சம் தொகையை அரசுக்கு செலுத்தாமல் தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தி வந்தது அண்மையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.