செய்திகள் :

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

post image

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது.

இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது.

வங்கதேச அணி
வங்கதேச அணி

அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது.

அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐசிசி
ஐசிசி

இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, " வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன்.

ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது.

அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது.

வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார்.விஜ... மேலும் பார்க்க

காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்?" - எடப்பாடி பழனிசாமி

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி என்பவரை நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொ... மேலும் பார்க்க

"எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது"- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார்.சென்னையில் நேற்று ( ஜன.24... மேலும் பார்க்க

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார். தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் ... மேலும் பார்க்க

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது" - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில் தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத... மேலும் பார்க்க