'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்...
"எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது"- தமிழிசை சௌந்தரராஜன்
“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார்.
சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம்.
இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது.

அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.














.jpg)