New World Order உருவாகிறதா? Canada PM Mark Carney கொடுத்த எச்சரிக்கை! | Davos | ...
சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க..." - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது.
குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது.
காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது.
இந்த நிலையில்,புகழ்பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், ``நேற்று சிறை படம் பார்த்தேன். மிகவும் அழகான திரைப்படம். காட்சிகள் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாகவும், நம்மோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு இதமான காதல் கதையை இப்படம் கொண்டுள்ளது.

இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்குவதற்கு, இயக்குநர் நிச்சயமாகப் பலத்த ஆராய்ச்சி செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்தவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறர்.

















