New World Order உருவாகிறதா? Canada PM Mark Carney கொடுத்த எச்சரிக்கை! | Davos | ...
'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார்.

இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு.

இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.













