"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதம...
சிறை: ``பெருமைபடுகிறேன்... அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்" - நடிகை குஷ்பு சுந்தர்!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது.
குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது.
காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது.
இந்த நிலையில்,நடிகை குஷ்பு சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், ``சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சிறை திரைப்படத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அனைவருமே அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் பிரபுவைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.

அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு, மிகக் கட்டுக்கோப்பான நடிப்பை நீ வழங்கியிருப்பது, "புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்பதை நிரூபிக்கிறது. உன்னைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
சரியான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

















