"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதம...
TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா' ஆதவ்!
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை.

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை வெறும் ரசிகர் மன்றம் சார்ந்தவர்கள் என பொய்பிரசாரம் செய்வார்கள். நம்மிடம் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. 2300 ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கே கட்சியின் கட்டமைப்பு மீது சந்தேகம் இருந்தது. கடந்த நான்கு மாதங்களாக கடினமாக உழைத்து கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு செல்கையில், அண்ணனோடு காரில் சென்றேன். அப்போது வண்டி சிக்னலில் நின்ற போது அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து அண்ணனை கண்டுகொண்டார்கள்.
திமுக வீட்டில் நம்முடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். எடப்பாடியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவுடன் ஒரு 20 பேர் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். விசிக மொத்தமும் தவெகவில்தான் இருக்கிறது.

திமுக என்பது திருட்டு திமுக. அவர்கள் நம்மைப் பார்த்து கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நாங்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறோம். அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை எங்கே? திருமா அதை கேட்பாரா? உங்களையெல்லாம் அடியாட்களைப் போல திமுக பயன்படுத்துகிறது.
மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் முதல்வரின் சாதனை. எங்கே பாஜகவை எதிர்க்க வேண்டுமோ நாங்கள் எதிர்ப்போம். 2026 தேர்தல் திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல்.
செந்தில் பாலாஜியை 2 நிமிடம் பெரியாரை பற்றி பேசச் சொல்லுங்கள். இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து மிரட்டப்படுகிறோம் என்கிறார்கள். மிரட்டுகிறவர்கள்தான் பயந்தவர்கள் என்று அர்த்தம். அமைதியாக இருப்பவர்கள்தான் தைரியமானவர்கள்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது கூட்டணியை நம்பி உருவாக்கவில்லை. தாய்க்குலத்தை நம்பி உருவாக்கினார். அப்படித்தான் தலைவரும் கட்சி தொடங்கியிருக்கிறார்.

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்குள் தலைவர் நுழைந்தவுடனேயே 10 பேர் செல்பி எடுக்க ஓடி வந்தார்கள். எல்லா இடத்திலும் அவரின் ஆட்கள் இருக்கிறார்கள். தலைவரை பிடித்த எதோ ஒரு அதிகாரி என்ன பிரச்னை ஆகினாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டதால்தான் விசில் சின்னம் கிடைத்திருக்கிறது' என்றார்.












