”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே...
'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!
தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை.

அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது.
அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள்.
என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை.

யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள்.
அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க.
நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.












