"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதம...
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது.
காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக முயற்சியில் இறங்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஏற்கெனவே `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமாவளவன்.
இந்நிலையில் இன்று( ஜன.25) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டோம்.
அந்த இரு கட்சிகளும் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஓர் அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
.jpeg)
ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும்.
பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம்" என்று திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.












