செய்திகள் :

போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!

post image

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய்

அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்." என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க