செய்திகள் :

மகளிருக்கு ரூ.5000: "பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?" - எடப்பாடி பழனிசாமி

post image

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்திருந்தாலும் எதிர்கட்சிகள் இதனை விமர்சனம் செய்துவருகின்றனர். அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஸ்டாலினினை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?

செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியா ஆட்சி வீட்டு Billலே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்

இன்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்த அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. சேவா தீர்த்தின் பொன்மொழியாக, 'குடிமக்கள் இறைவனுக்க... மேலும் பார்க்க

'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த தி... மேலும் பார்க்க

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்... மேலும் பார்க்க

TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,00... மேலும் பார்க்க

'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained

'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்... மேலும் பார்க்க