செய்திகள் :

"மகளிர் உரிமைத்தொகை விரைவில் நேரடியாக வரவு; மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை" - தமிழ்நாடு அரசு

post image

2021 டு 2026 திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதே இந்தத் திட்டம்.

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தது.

இப்போது மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது...

"மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

உரிமைத்தொகை
உரிமைத்தொகை

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்".

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எ... மேலும் பார்க்க