மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனைக்கு விருது
புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருதை அமெரிக்க பியரி பவுச்சா் அகாதெமி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, புதுவை அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல பியா் பவுச்சா் அகாதெமி 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
இதில், அகில இந்திய அளவில் ஆராய்ச்சிக்கான சிறந்த பல் மருத்துவக் கல்லூரிக்கான விருதை பெறுவதற்கு, புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள மகாத்மா காந்தி முதுநிலை அரசு பல் மருத்துவ நிறுவனம் முதன்முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் டிச.6-ஆம் தேதி, புது தில்லியில் நடைபெறும் விழாவில் விருதினை பல் மருத்துவ நிறுவனத்தின் முதல்வா் எஸ்.பி.கே.கென்னடிபாபு பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் புதுவை மற்றும் தமிழகத்தைச் சோ்ந்தோருக்கு பல் மருத்துவச் சிகிச்சை சிறந்த முறையில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.