செய்திகள் :

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோயில் ஒன்றில் பக்தர்கள் நேற்று மாலையில் திரளாக பூஜைக்காக கூடி இருந்தனர். மழை பெய்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கு போடப்பட்டு இருந்த இரு குடில்களில் ஒதுங்கினர். புயல் மற்றும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் ஒதுங்கிய கோயில் குடில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். மற்றொரு குடிலில் இருந்த மேற்கூரையை சூறாவளிக்காற்று அடித்துச்சென்றுவிட்டது.

சுவர் இடிந்தவுடன் மற்ற பக்தர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அங்கு காவலுக்கு வந்திருந்த போலீஸார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்தனர். சுவர் இடிபாடுகளில் சிக்கி 14 வயது பையன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,''குடில் சுவர் வழக்கமான செங்கல் மூலம் கட்டப்படவில்லை என்றும், அங்குள்ள மலைப்பகுதியில் கிடைக்கும் கற்களை கொண்டு செய்யப்பட்ட செங்கலால் கட்டப்பட்டது என்று தெரிவித்தனர்.

கோயிலுக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் காட்டுக்குள் இருந்ததால் மீட்பு குழுவினருக்கு உடனே தகவல் கிடைக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சூறாவளிக்காற்று 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சி... மேலும் பார்க்க

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்த... மேலும் பார்க்க

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கட்டிடத்தின் 2வது மாடியில் பற்ற... மேலும் பார்க்க

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே ந... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க