செய்திகள் :

மண்ணச்சநல்லூர்: ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள்!

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியை தொடங்கியுள்ளனர். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நிலையில், உள்ளே ஏதோ சிலைகள் தென்பட்டு உள்ளது. இதனால், ஆச்சர்யமானவர்கள், மேலும் மண்ணை அகற்ற அடுத்தடுத்து 3 சிலைகள் தென்பட்டதால் உடனே இது குறித்து மணச்சநல்லூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மண்ணச்சல்லூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் வட்டாட்சியர் அங்கு விரைந்தனர். அங்கு சிலைகளை ஆய்வு செய்த போது அவை ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி, மூ(மூத்த)தேவி சிலை என்பது தெரிய வந்தது. அதனுடன், மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்கு பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது.

திருச்சி

மேலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த ஐம்பொன் சிலைகளை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதற்கிடையில், பூமிக்கடியில் பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து சிலையை தரிசனம் செய்து சென்றனர்.

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா!

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா; கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜனவரி 31) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மீனாட்சியம்மன்திருவிழாக்களின் நகரமான மதுரை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர சீரமைப்பு: `அதிசய மூலிகை ஓவியங்கள்’ - பக்தர்கள் வைக்கும் கோரிக்கை

மகா கும்பாபிஷேகம்முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணகான பக்தர்களும் விடுமுறை ... மேலும் பார்க்க

மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை - 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்!

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ள... மேலும் பார்க்க

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் தோரணமலையில் தைப்பூச சங்கல்ப விழா - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை சங்கல்ப விழா: 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீ... மேலும் பார்க்க