செய்திகள் :

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது - ஆர்டிஐயில்வெளியான தகவல்!

post image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 3 வருடங்கள் கழித்து மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்து மத்திய அமைச்சரவையிடம் அனுமதியும் பெறப்பட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக குழு அமைத்தல் போன்ற வேலைகள் முடிந்து கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து கடந்த வருடத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடரப்பட்டு இன்று வரை நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலர் தர்ம்பீர் குமார் சிங் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது எனவும், மதுரை எய்ம்ஸ் மொத்த திட்ட மதிப்பீடு 2021.51 கோடி எனவும், 471.02 கோடி மத்திய  பட்ஜெட்டில் இருந்து மதுரை எய்ம்ஸ் க்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 2026 இல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா

இது தகவல்கள் குறித்து  ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், "தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ல் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து தான் 22 மே 2024 அன்று கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் 47 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து உள்ளது.

மீதமுள்ள 53 சதவீத பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசரக் கதியில் மதுரையையும் மருத்துவமனையை திறக்கக் கூடாது. கட்டுமான பணிகளை முடிப்பதற்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமானதாக அமையும்.

மதுரை எய்ம்ஸ் பணிகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலாமலேயே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து  வெளியே செல்லும் நிலை உள்ளது. எனவே வரும் நாட்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உதவி வழங்கும் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து நிதி கிடைப்பதற்கு மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

`` `பிரபலம்' என்பது மட்டுமே கட்சி தொடங்குவதற்குப் போதுமா?" - நடிகர் நாசர்

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, ``ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது சவா... மேலும் பார்க்க

அ.தி.மு.க- வில் இன்று இணையும் காளியம்மாள்? என்ன பொறுப்பு?

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவருக்குக் கட்சியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுக... மேலும் பார்க்க

'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சில... மேலும் பார்க்க

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்... மேலும் பார்க்க

`எங்க ஆளுங்கதான், ஆனா திமுக MLA' - ஒற்றை சீட் எனும் முட்டுச் சந்தில் மதிமுக! - காரணம் யார்?

நேற்று மாலை முதல் சமூக ஊடகங்கள் முழுக்க கட்சியில் மிச்சமிருக்கிற மதிமுக தொண்டர்களின் வலிகள் நிறைந்த பதிவுகளைப் பார்க்க முடிகிறது.மதிமுகவிலிருந்து வெளியேறிவிட்ட மல்லை சத்யா கூட, "புரண்டு புரண்டு படுத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்க... மேலும் பார்க்க