செய்திகள் :

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்... பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

post image

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி.

மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில்

இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. ஆக்ரோஷமாக அம்மன் திரிசூலம் ஏந்திய தேவியாகக் காட்சிகொடுக்கிறாள். அக்னி ஜூவாலைகளையே தன் கிரீடமாகக் கொண்ட அன்னையைப் பார்த்தாலே நம் மனபயம் அகன்றுவிடும். துர்சக்திகள் விலகிவிடும். அன்னையின் திருமேனி அகலமான பீடத்தில் அமைந்திருக்கிறது. அன்னைக்கு அருகில் நிற்கும் குதிரைகள் போர்க்களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளைப் பந்தாடத் தயாராக இருப்பதுபோல் முன்னங்கால்களைத் தூக்கி நிற்கின்றன.

இங்கே மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஐயனார். ஐயனைக் காணும்போதே மேனி சிலிர்க்கிறது. இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். பத்ரகாளியை பக்தியோடு வணங்குவதுபோன்று ஐயனாரையும் அன்போடு வேண்டிக்கொண்டால் அனைத்து நன்மைகளும் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மூழ்கிப்போனது. அப்போது அன்னை மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்துவீச மதுரையின் எல்லையாக அவர் நின்றார்.

மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில்

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வகுத்த ஈசன் கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார்.

ஈசன் தன் கைகளால் இறுக்கிக் கட்ட ஆதிசேஷனின் விஷம் வெளியேறியது. அப்போது அங்கிருந்த அம்பிகை அதை உண்ணும்படியாயிற்று. எனவே அவள் அந்த விஷத்தை உண்டு ஆங்கார ரூபிணியாக, காளியாக எழுந்தருளினார். கலியுகம் முடியும்மட்டும் அங்கே அம்பிகை காளியாகக் கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் செய்யட்டும் என்று ஈசன் வரமளிக்க அங்கேயே அன்னை கோயில்கொண்டு அருள்பாலித்துவருகிறாள்.

அங்கு அன்னைக்குக் காவலாக ஐயனாரும் எழுந்தருளினார். தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாக நிற்கும்படிப் பணித்து தானும் அங்கே அடைக்கலம் காத்த ஐயனாராக எழுந்தருளினார்.

இங்கு வந்து வேண்டிக்கொண்ட பக்தர்களுக்கு அன்னை காளி நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். நோய்நொடிகள், எதிரிகளின் தொல்லைகள், வறுமை, கடன் தொல்லை என்று பல்வேறு துன்பங்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னைக் காளி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒருமுறை வந்து வேண்டிக்கொண்டாலே தீராத வினைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

காளியம்மனுக்கு வடக்கே இருக்கிறது சத்தியக்கல். இரு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தக் கல்லில் இருவரும் சூடத்தை ஏற்றி, `காளி சத்தியமா நாங்க தப்பு செய்யவில்லை' என்று சத்தியம் செய்யவேண்டும். இருவரும் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு, காளியம்மனுக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்து, தப்பு செய்யவில்லை என ஒப்புக் கொடுக்க வேண்டும். அதுக்கு முன்னதாக, தப்பு செய்தவர்கள், ஒப்புக்கொண்டால் பிழைத்தார்கள். இல்லை என்றால் பொய் சத்தியம் செய்தவரைக் காளி உண்டு இல்லை என்று செய்துவிடுவாளாம். `தண்டிப்பதில் இவள் கறாரானவள் என்பதால் இவளிடம் யாரும் பொய் சொல்வதில்லை' என்கிறார்கள் ஊரார். தப்பு செய்தவர், இங்கு வந்த உடனே மனம் திருந்தி பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டு நிவாரணம் செய்த கதைகளும் அநேகம் உண்டாம்.

வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை மடப்புரம் சென்று அன்னை பக்தரகாளியை வழிபாடு செய்து வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்: அவப்பெயர் நீங்கும்... பிள்ளைகளின் கல்வி சிறக்கும்!

கல்வியே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மாபெரும் செல்வம். அந்தச் செல்வத்தைக் குறைவின்றிப் பெற்றிட இறையருள் நமக்குத் தேவை. அப்படிப்பட்ட அருளை அள்ளி அள்ளித் தரும் தலம்தான் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயி... மேலும் பார்க்க

திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!

இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!

வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழி... மேலும் பார்க்க

தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album

பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவி... மேலும் பார்க்க