செய்திகள் :

மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவலர் கணேசன், அங்கு மது அருந்தியது குறித்து அவர்களிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து காவலர் கணசேன் சட்டையைப் பிடித்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் கணேசன் அளித்த தகவலின் பேரில், தென்னிலை மற்றும் க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் காவலர் கணேசனை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மேலும், இரவு ரோந்து பணியில் இருந்த காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 வடமாநில இளைஞர்களையும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தென்னிலை காவல் ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீஸார் தென்னிலை அருகாமையில் உள்ள நிறுவனங்களில் திடீர் தேடுதல் மேற்கொண்டனர.

police

அப்போது, விசாரணையில் குடக்கில் நாயக் (வயது: 27) , சகாதேவ் பாரீக்(வயது: 26), ரவிந்தீர கட்டய்யா (வயது: 22) ஆகிய மூன்று வட மாநில இளைஞர்களை, தென்னிலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் மது போதையில் காவலரைத் தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியரை மது போதையில் தாக்கியது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் இரவு 10 மணிக்குமேல் மதியம் 12 மணி வரை கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதால், பொது இடங்களில் மது அருந்தும் மது பிரியர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, ... மேலும் பார்க்க

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க