செய்திகள் :

மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

post image

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். விசாரணையில் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கழிவறை இணைப்பு ஒன்று தவறுதலாக குடிநீர்க் குழாயுடன் கலந்திருந்தது தெரிய வந்தது.

இந்தச் சாக்கடை தண்ணீரைக் குடித்து 5 மாத குழந்தை கூட உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது.

இந்தூரில் சாக்கடை தண்ணீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர் சுனில். கூரியர் கம்பெனியில் வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவ்யான் என்ற அக்குழந்தையின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் தாய்ப்பால் சுரங்கவில்லை. இதையடுத்து டாக்டரின் ஆலோசனையின் பேரில் பாக்கெட் பாலில் சிறிது தண்ணீர் கலந்து குழந்தைக்குக் கொடுத்து வந்தனர். ஆனால் குழந்தைக்கு எந்தவித நோயும் இல்லை.

பாதிக்கப்பட்ட பகுதியில் அமைச்சர் கைலாஷ்
பாதிக்கப்பட்ட பகுதியில் அமைச்சர் கைலாஷ்

திடீரென குழந்தைக்குக் காய்ச்சலும், பேதியும் ஏற்பட்டன. டாக்டரிடம் கூட்டிச்சென்று மருந்து கொடுத்தனர். ஆனாலும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. காலையில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது பரிதாபமாக இறந்து போனது.

சாக்கடை கலந்த குடிநீரை பாலில் கலந்ததால்தான் குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து குழந்தையின் தந்தை சுனில் கூறுகையில், ''கடவுள் பத்து வருடங்களுக்குப் பிறகு எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். பின்னர் அதைக் கடவுள் எடுத்துக்கொண்டார். தண்ணீர் அசுத்தமாகிவிட்டதாக யாரும் சொல்லவில்லை. தண்ணீர் அசுத்தமாகும் என்று எங்களுக்குத் தெரியாது. டாக்டர் சொன்னதால்தான் பாலில் தண்ணீர் கலந்து கொடுத்தோம்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.

டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" - சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு

Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025... மேலும் பார்க்க

இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத... மேலும் பார்க்க

கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. பான் - ஆதார் இணைப்பு நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி. இன்னமும், இந்த இரண்டையும் ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந... மேலும் பார்க்க

இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந்துகொள்ளலாம்|How to?

இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. அதற்குள் (டிசம்பர் 31) பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில், பான் செல்லாமல் போய்விடும். பான் செல்லாமல் சென்றுவிட்டால் வருமான வரி தாக்கல் முதல் வருமான வரி ... மேலும் பார்க்க

ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப... மேலும் பார்க்க