செய்திகள் :

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

“பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது.

அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன்.

பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை.

பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை.

இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது.

90-களில் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தால்' திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது.

நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Vaa Vaathiyaar: "கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க" - 'ஏஸ்' பட இயக்குநர் குற்றச்சாட்டு

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்... மேலும் பார்க்க

"Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால்" - 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்... மேலும் பார்க்க

Netflix: 'சூர்யா 46', 'கர', 'டயங்கரம்' - களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைன்அப்; என்னென்ன படங்கள் தெரியுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026-ல் வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறது.இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்புக... மேலும் பார்க்க