7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வ...
மனநலம் பாதிக்கப்பட்டு சென்னையில் திரிந்த ஜார்க்கண்ட் நபர்; 'வாட்ஸ்அப்'பால் மகனுடன் சேர்ந்தது எப்படி?
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட சிறிய தகராறில் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
அவரது மனைவி முன்னாதேவி தனது கணவரைப் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ரமேஷ் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக சென்னைக்கு வந்தார். ரமேஷ் மனநலப் பிரச்னைகள் மற்றும் போதைப்பொருள் பிரச்னையால் சென்னையின் தெருக்களில் அலைந்து திரிந்தார்.
சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான உதவும் கரங்கள் கடந்த 16-ம் தேதி பூந்தமல்லியில் அவரைக் கண்டுபிடித்து மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு வந்தனர். அவருக்கு மருத்துவ மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பழைய நினைவுகள் வந்தன.

இதன் மூலம் தன்னார்வலர்கள் அவர் ஜார்கண்டிலிருந்து வந்தவர் என்பதை அறிந்துகொண்டு அவரது புகைப்படத்தை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பினர்.
இந்த மெசேஜ் இந்தியா முழுக்க பரவியது. ஜார்க்கண்ட் மாநிலம் கல்யாண்பூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தும் ஒருவருக்கும் அந்த மெசேஜ் வாட்ஸ்ஆப்பில் வந்தது. உடனே அவர் ரமேஷை அடையாளம் கண்டுகொண்டார். ரமேஷ் குடும்பம் அருகில்தான் வசித்து வந்தது. உடனே ரமேஷ் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே ரமேஷ் மனைவி முன்னாதேவி தனது மகன்களிடம் ரமேஷை உடனே அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.
ரமேஷின் ஒரு மகன் சென்னையில்தான் வேலை செய்து கொண்டிருந்தார். ரமேஷின் மூத்த மகன் நாகேஷ்வர், மறுவாழ்வு மையத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சென்னையின் புறநகரில் பணிபுரிந்து வந்தார். அவர் தகவல் கிடைத்து உடனே சில மணி நேரத்தில் மறுவாழ்வு மையத்திற்கு வந்தார். அங்கு அப்பாவும் மகனும் சந்தித்துக்கொண்டனர். ரமேஷ் காணாமல் போனபோது ரமேஷிற்கு 5 வயது ஆகும். ரமேஷ் தனது மகனுடன் ஜூன் 21 அன்று வீடு திரும்பினார்.
இது குறித்து முன்னாதேவி கூறுகையில், ''இறுதியாக என் பிரார்த்தனைகள் பலித்துவிட்டன" என்று கூறினார். ஒரு வாட்ஸ்ஆப் மெசேஜ் 16 ஆண்டுகள் பிரிந்து இருந்தவரை அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்து இருக்கிறது.
















