செய்திகள் :

`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என்ற துறையை உருவாக்கி, 100-க்கும் அதிகமான கள்ளர் பள்ளிகள் உருவாக்கி, அதன் மூலம் பலரும் கல்வியால் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் 2 கிலோ மீட்டர் துரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இதனால் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், வேலைகளுக்காக ஊர்மக்கள் இடம்பெயர்தல் போன்ற காரணங்களால், கிராமப்புற பகுதிகளில் இயங்கும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை படிப்படியாக குறைந்து, இன்று பள்ளிகள் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓணாம்பட்டி கிராமங்களில் இயங்கி வந்த மூன்று அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இன்று மூடப்பட்டது.

உசிலம்பட்டியில் அடுத்தடுத்து மூடப்பட்ட அரசு பள்ளிகள்

இந்த ஊரில் உள்ள மக்கள் வேலை தேடி ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கிராமங்களில் பள்ளிகளில் சேர போதிய மாணவ, மாணவிகள் இல்லை.

அப்பள்ளிகளில் பயின்ற ஒரிரு மாணவ மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கும் கடந்த 2 ஆம் தேதியே பணி மாறுதல் வழங்கப்பட்டு, நிரந்தரமாக இக்கிராமங்களில் இயங்கி வந்த பள்ளிகள் மூடப்பட்டது, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை தாதம்பட்டி, ஓனாப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில் இந்த கிராம மக்கள் அடுத்த அடுத்த கிராமங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் அடுத்தடுத்து மூடப்பட்ட அரசு பள்ளிகள்

மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுப்பதோடு, ஆரம்ப பள்ளி முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, மூடப்பட்ட பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.

``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்... மேலும் பார்க்க

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலை... மேலும் பார்க்க

விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக, ஈரானுக்கு, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு தலைமை பொறுப... மேலும் பார்க்க

'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து..!'- முதல்வரைச் சாடும் உதயநிதி

‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர் பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் ... மேலும் பார்க்க

``முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது" - சு.வெங்கடேசன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச... மேலும் பார்க்க

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை, ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.எடப்ப... மேலும் பார்க்க