செய்திகள் :

மாதம் ரூ.1 - ரூ.3 லட்சம் பெறுவது எப்படி? - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசத்தல் Financial Planning!

post image

துபாய், குவைத், ஓமன், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகம் முழுக்க பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு வேலைப் பார்த்து, கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்

இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். வாங்கிய இடம் பத்திரமாக இருக்கும், விலையும் அதிகமாகும் என அவர்கள் நம்புவதால், ரியல் எஸ்டேட்டிலேயே அவர்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், இந்தியா முழுக்கவுமே ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான சிந்தனை மிகவும் மாறிவிட்டது என்பதை இந்தியாவில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை.

முதலீடு | Investment

இன்றைக்கு ஒருவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

இந்த முதலீட்டை செய்து வீடாக வாங்கி இருக்கும்பட்சத்தில் அதற்கு வாடகையாகக் கிடைப்பது என்னவோ அதிகபட்சம் ரூ.50,000-தான். விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரியல் எஸ்டேட் விலை முன்பு உயர்ந்தது போல இனியும் உயரும் என்று சொல்லும் நிலை இப்போது இல்லை. தவிர, ரியல் எஸ்டேட்டுகளின் விலையேற்றம் என்பது ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், நாம் எதிர்பார்க்கும் வருமானம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்கிற கேள்வி வருகிறது.

Swaminathan

இந்த நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த வகையில் தங்கள் முதலீடுகளை அமைத்துக்கொண்டால், ஓய்வுக் காலத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வகை வருமானம் பெற முடியும் என்பதை எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மூலம் ஒரு சிறப்புக் கூட்டத்தை வருகிற ஏற்பாடு செய்கிறது.

இந்தக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படிச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல விருக்கிறார் ஆதித்யா பிர்லா சன்லைன் லைப் ஏ.எம்.சி லிமிடெட் நிறுவனத்தின் ரீடெய்ல் சேல்ஸின் ரீஜினல் ஹெட் கே.சுவாமிநாதன்.

Online registration

இந்தக் கூட்டமானது வருகிற 29-ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடத்தப்பட விருக்கிறது. இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகர்கள் பின்வரும் லிங்கினை சொடுக்கி, https://labham.money/webinar-nov-29-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov29_2025 தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.  

உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!

ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!

'இந்த' சூழலில் தங்க நகை அடமானக் கடனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள்

தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன்களை விட, நம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது, 'தங்க நகை அடமானக் கடன்'. இந்தக் கடனை எப்போது வாங்கலாம்... எப்போது வாங்கக்கூடாது என்பதை விளக்குகிறார் My Assets Con... மேலும் பார்க்க

பணத்தைப் பல மடங்காக்கும் 'அஸெட் அலொகேஷன்' சீக்ரெட்... கற்றுக்கொள்ள வேண்டுமா?

முதலீட்டில் பலரும் பல தவறுகளைச் செய்கிறோம். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போடுகிறார்கள், அதேபோலத்தான் சிலர் ரியல் எஸ்டேட் தாண்டி எந்தமுதலீட்டையும் செய்வதில்லை. சிலரோ பங்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனைவரும் கலந்துகொள்ளலாமே!

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலே உற்சாகமாகிவிடுவார்கள். முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் உற்சாகமாகக் கிளம்பி விழி... மேலும் பார்க்க

பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான' ரகசியம்

"எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்!"மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற!இன்னை... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இனி ஏறுமா அல்லது இறங்குமா?- ஷேர் மார்க்கெட் எக்ஸ்பர்ட் வ.நாகப்பன் பேசுகிறார்!

ஓராண்டுக்கு முன்பு இறங்கத் தொடங்கிய பங்குச் ச்ந்தை கடந்த ஏப்ரல் மாதம் வரை இறக்கத்திலேயே பயணமானது. பிற்பாடு மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய சந்தை தற்போது பழைய நிலையை எட்டியதுடன், அதற்கு மேலும் உயரத் தொடங்கி... மேலும் பார்க்க

வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

முதலீடு என்று வரும்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் முதன்மையான தேர்வு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு யூலிப் பாலிசித் திட்டங்கள்தான் அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு மிகவும் ... மேலும் பார்க்க