செய்திகள் :

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

post image

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அந்த இடத்தில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்று இருந்த சரத் பவார் இப்பதவிக்கு போட்டியிட எதிர்க்கட்சிகள் சம்மதித்தன. இதையடுத்து சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே

எனவே சரத் பவார் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களான உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நானா பட்டோலே, விஜய் ஆகியோரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவித்து, தன்னை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதோடு சரத் பவார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து சரத் பவார் பேசுவது இதுவே முதன்முறையாகும். வரும் மே மாதம் சட்டமேலவையில் உத்தவ் தாக்கரேயின் பதவிக்காலம் முடிகிறது. மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அவர்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

அந்த ஓர் இடத்திற்கு உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்வது குறித்து சரத் பவார் கூட்டிய விருந்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொள்ளவில்லை.

சைதாப்பேட்டை முதல் காரைக்குடி வரை; அமமுக போட்டியிடும் உத்தேச தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 11 தொகுதிகள், அங்கு போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளிய... மேலும் பார்க்க

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பா.ம.க போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்... மேலும் பார்க்க

“த.வெ.க-வுடன் தனி அணி; `போட்டி' காங்கிரஸுக்கு 20 சீட்!” - காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் சத்தமில்லாமல் ஒரு டீம் வெளியேற தயாராகி... மேலும் பார்க்க

நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ - புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும்... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தஞ்சாவூர் மாவட... மேலும் பார்க்க

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந... மேலும் பார்க்க