மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பயிற்சி
வேதாரண்யத்தில் மாநில அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, வீதி நாடகம், நாட்டுப்புறப் பாடல்கள், நிகழ்த்து கலைகள் என பல்வேறு கலைப்பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.
இந்த மாணவா்களுக்கு அவா்கள் பங்கேற்கும் கலைப்பிரிவின் பயிற்றுநா்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2 நாள்கள் நடத்தப்படுகிறது. வேதாரண்யத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு நாகை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி வகுப்புகளை வட்டாரக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம் தொடங்கிவைத்தாா். தமிழாசிரியா்கள் சண்முகசுந்தரம், பாலாஜி, தமிழ்மணி, இசை ஆசிரியா் இந்திரா காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.