செய்திகள் :

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மானாமதுரை காவல்துறையினரால் 6-3-2026 அன்று கைதுசெய்யப்பட்டார். கைது நடவடிக்கையின்போது போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெலிசன் கீழே விழுந்து, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கால் காயத்துக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ், 8-3-2026 அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.  

ஆகாஷின் பெற்றோர்களை காவலர்கள் சாதியை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

ஆகாஷ் டெலிசன் இறப்பதற்கு முன் நீதித்துறை நடுவரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் காவல்துறையினர் தன்னுடைய காலை உடைத்ததாக கூறியிருந்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ்  வழக்கு மாற்றம் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டனர்.

மேலும் ஆகாஷின் உடல் உடற்கூறாய்வு செய்து அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும், காவல்துறையில் உள்ள சிசிடிவி வீடியோக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சாலை மறியலில் ஈடுபட்ட ஆகாஷ் டெலிசன் உறவினர்கள்

தொடர்ந்து ஆகாஷின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு - கூட்டாளிகள் கைது!

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் ம... மேலும் பார்க்க

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.30 லட்சம் பறிப்பு; பட்டதாரிகள் போலீஸில் சிக்கிய பின்னணி!

சென்னை வேளச்சேரி, காந்தி நகரில் வசித்து வருபவர் உத்தம்சன் (65). இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜவுளி வியாபாரத்தோடு பழைய தங்க நகைகளை வாங்கும் பிசினஸிலும் ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு... மேலும் பார்க்க

'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நில... மேலும் பார்க்க

`உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது' - பெண் பல் மருத்துவரின் விபரீத முடிவு

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் ச... மேலும் பார்க்க