செய்திகள் :

`மாப்பிளைக்கு சுகர் இருக்கு'- தரகு பணம் தராத ஆத்திரம்; மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய நபர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் பேசி முடித்துள்ளாராம். இந்த நிலையில், பெண் வீட்டில் அந்த நபருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை பேசியபடிக் கொடுத்துள்ளனர். ஆனால், மணமகன் வீட்டில் பேசிய பணத்தை தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த திருமண ஏற்பாட்டாளரான நபர், தரகுப் பணத்தை மணமகன் வீட்டில் கேட்டுள்ளார்.

திருமண மண்டபம்

அவர்கள் தர முடியாது என்று கூறியுள்ளனராம்.  இதனால் ஆத்திரமடைந்தவர், நேராக திருமணம் நடக்கும் சாத்தான்குளத்தில் உள்ள மண்டபத்திற்குச் சென்று, மணமகனுக்கு காலில் ஏற்கெனவே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தை போட்டோவில் காண்பித்து, ``மணமகனுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதனால்தான் காலில் காயம் ஆறாமல் உள்ளது. தெரியாமல் நான் உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், உடனடியாக மணமகன் வீட்டிற்கு போன் செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அவர்கள், ``இது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான்" என்று கூறியுள்ளனர். ஆனால், அதைக் கேட்காத மணமகள் வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனும் மணமகன் வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

சாத்தான்குளம் பஜார்

இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி இந்த திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணமகன் வீட்டார், உறவினர்களிடம் விசாரித்து பார்த்தபோது திருமண ஏற்பாட்டாளர், தனக்கு வர வேண்டிய தரகுப் பணத்தைத் தராத ஆத்திரத்தில் இப்படிச் செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க