செய்திகள் :

மார்க்கெட் பார்த்து பயமா? ஏன் தைரியமானவர்களுக்கு மட்டுமே பங்குச்சந்தை லாபம் தருமா?

post image

மார்ச் 2026... நியூஸ் சேனலைத் திறந்தாலே ஒரே ரத்தக் களறிதான். ஒரு பக்கம் "அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்", இன்னொரு பக்கம் "கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஐத் தாண்டிவிட்டது", உலக மார்க்கெட் எல்லாம் சரியுதுன்னு தலைப்புச் செய்திகள் பயமுறுத்துகின்றன.

இதன் விளைவாக நம்ம ஊர் மார்க்கெட்டும் சும்மா இருக்குமா? மார்ச் முதல் வாரத்தில் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் ஆட்டம் காண வைத்தது. நிஃப்டியும் 700 புள்ளிகள் வரை சரிந்தது. நம்ம ஆட்கள் பல பேருக்குப் பதற்றத்துல வியர்த்து ஊத்துது. "ஐயோ, போட்ட காசு எல்லாம் போச்சே! மார்க்கெட் இன்னும் கீழ போயிடுமோ? இப்பவே எல்லாத்தையும் வித்துட்டு வெளில வந்துடலாமா?" என்று பயத்தில் உறைந்திருக்கிறார்கள்.

கொஞ்சம் பொறுங்க பாஸ்! மார்க்கெட் இப்படிச் சரிவது முதல் முறையா என்ன?

வரலாறு சொல்லும் உண்மை என்ன?

பழைய கதையை கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம்.

2008-ல் உலகப் பொருளாதார வீழ்ச்சி (Global Financial Crisis) வந்தபோது, நிஃப்டி பாதிக்குப் பாதி சரிந்தது. "அவ்வளவுதான் மார்க்கெட் காலி" என்றார்கள். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே அது டபுள் மடங்கு லாபம் தந்தது.

2020-ல் கொரோனா வந்தபோது, நிஃப்டி 7,500 புள்ளிகளுக்குச் சரிந்தது. உலகமே முடங்கிப்போன அந்த நேரத்தில் மார்க்கெட் அவ்வளவுதான் என்று பலரும் விற்றுவிட்டு ஓடினார்கள். ஆனால், அதன் பிறகு மார்க்கெட் 25,000 புள்ளிகளைத் தொட்டு ஒரு சரித்திர சாதனை படைத்தது!

இப்போது 2026-ல் நடக்கும் இந்தச் சரிவும் அதுபோல ஒரு தற்காலிகமான விஷயம்தான். 5 வருடங்களுக்கும் மேல் முதலீட்டைத் தொடர இருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பே.

மாபெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி & எழுச்சி

ஏன் இந்தச் சரிவில் நீங்கள் விற்கக் கூடாது?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எஃப்.ஐ.ஐ (FII) எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் பயந்துபோய் பணத்தை வெளியே எடுக்கிறார்கள். ஆனால், நம்ம ஊர் டி.ஐ.ஐ (DII) எனப்படும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் (அதாவது உங்களைப் போல மியூச்சுவல் ஃபண்டில் மாதம் மாதம் SIP செய்யும் சாமானியர்கள்) இந்த மார்க்கெட் வீழ்ச்சியைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பங்குகளை வாங்கிச் சேர்க்கிறார்கள்.

மார்க்கெட் சரியும்போது விற்றுவிட்டு ஓடுபவர்கள் எப்போதுமே நஷ்டத்தில்தான் இருப்பார்கள். ஆனால், சரிவை ஒரு 'டிஸ்கவுண்ட் சேல்' போலப் பார்த்து, தைரியமாக முதலீட்டைத் தொடருபவர்களுக்கே மார்க்கெட் ராஜ மரியாதையுடன் லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

மார்க்கெட் எப்போதுமே தைரியமானவர்களைத்தான் கொண்டாடும்!

மார்க்கெட் கீழே போகும்போதுதான் நல்ல நல்ல நிறுவனப் பங்குகள் (Blue-chip stocks) குறைவான விலையில் கிடைக்கும். "Buy on dips" என்பதுதான் புத்திசாலியான முதலீட்டாளர்களின் தாரக மந்திரம். நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பயப்படாமல் அமைதியாக இருங்கள். உங்கள் SIP முதலீட்டை எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். உங்களிடம் கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால், மார்க்கெட் சரிந்திருக்கும் இந்த நேரத்தில் அதை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.

போர் பதற்றங்கள் தணிந்து, கச்சா எண்ணெய் விலை குறையும்போது மார்க்கெட் மீண்டும் ராக்கெட் வேகத்தில் மேலெழும்பும். அப்போது, இப்போது பயந்து ஓடியவர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

சரி, நீங்கள் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வது எப்படி?

உழைத்தது போதும்... 60 வயது வரை எந்திரம் போல ஓடிக் கொண்டிருக்காமல், 45 அல்லது 50 வயதிலேயே எப்படி நிம்மதியாக 'ரிட்டையர்' ஆவது? முன்கூட்டியே வேலையை விட்டாலும், வாழ்நாள் முழுவதற்கும் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க எந்தெந்த முதலீட்டு உத்திகள் (FIRE Strategy & Passive Income) கைகொடுக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்து, உங்கள் நிதிச் சுதந்திரத்தை முன்கூட்டியே திட்டமிட ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ!

labham workshop march 22, 2026

தலைப்பு: 60 வரை காத்திருக்க வேண்டாம்! - ஏர்லி ரிட்டையர்மெண்ட் சிறப்பு ஒர்க் ஷாப்
நாள்: மார்ச் 22, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: N. வைத்தியநாதன், பர்சனல் ஃபினான்ஸ் நிபுணர் & நிறுவனர், Vai's Pro-Active Finserve

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். ஒரு நிகழ்ச்சிக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. உடனே முன்பதிவு செய்யுங்கள்!

ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar22_2026

பாதிச் சம்பளத்தில் மீதி வாழ்க்கையா? அரசு ஊழியர்களின் GPF பணத்தை அழிக்கும் மிகப்பெரிய தவறு!

நாளைக்கு உங்கள் முதல் ரிடையர்மென்ட் நாள்.காலை அலாரம் அடிக்காது. அவசரமாகக் குளித்துக் கிளம்ப அலுவலகம் இல்லை. நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்து பேப்பரைப் படித்துக்கொண்டே ஃபில்டர் காபி குடிக்கலாம். எல்லாம... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம், சாத்தியம்! எப்படி? சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! அனுமதி இலவசம்

நம்முடைய மின்சார பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக ம... மேலும் பார்க்க

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி' சேர்க்கும் ஃபார்முலா!

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா?"முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆ... மேலும் பார்க்க

SIP: ₹1 கோடி சேர்ப்பது எப்படி? உங்கள் கனவை நனவாக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | புதுச்சேரி ஸ்பெஷல்

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 35 வயசுக்கு மேல ஆகிடுச்சா? கல்யாணம், குழந்தைகள்னு குடும்பப் பொறுப்புகள் தோள்ல ஏறிடுச்சா? மாசா மாசம் நல்ல சம்பளம் வருது, ஆனா அது இ.எம்.ஐ., வீட்டு வாடகை, மளிகை சாமான்,... மேலும் பார்க்க

'பழைய பென்ஷன்' இல்லையென்ற கவலையா? மாதம் ₹20,000 'இணை பென்ஷன்' வேண்டுமா? அரசு ஊழியர்களுக்காக!

"அரசு வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்க்கையில் கவலையே இல்லை" என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் (OPS) இல்லாத இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான அரசு ஊழியர்களின் தூக்கத்தைக் க... மேலும் பார்க்க

50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

ஐம்பது வயதைக் கடந்துவிட்டாலே, அனைவருக்கும் வரும் முதல் மிகப்பெரிய கவலை ‘ஓய்வுக்காலம்’ பற்றியதுதான். முப்பது முப்பத்தைந்து வருடங்கள் ஓடி ஓடி உழைத்து ஒரு ₹50 லட்சம் ரூபாயைச் சேர்த்திருப்பீர்கள். ஆனால், ... மேலும் பார்க்க