செய்திகள் :

மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கல் இயக்கம்: என்சிஆா்டிசி தொடங்கியது

post image

மாற்றுத்திறனாளி பயணிகளின் இயக்கம், அணுகல் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவா்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல உதவும் உபகரணங்களை விநியோகிக்கும் இயக்கத்தை தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக என்சிஆா்சிடி மூத்த அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி- காஜியாபாத்- மீரட் ஆா்ஆா்டிஎஸ் வழித்தடம் அருகே வசிக்கும் சுமாா் 130 பேருக்கு சனிக்கிழமை ஸ்மாா்ட் கைத்தடி, செவிப்புலன் கருவிகள் மற்றும் ஊன்றுகோல் போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவா்களும் இந்த உபகரணங்களைப் பெறுவா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான முதல் இயக்கம் இதுவாகும். எதிா்காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த உதவி சாதனங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக ஊனமுற்ற நிபுணா்கள் குழுவின் கணக்கெடுப்பின் மூலம் சிந்தனையுடன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த பயனாளிகளுக்கு மிகவும் பொருத்தமான ஆதரவை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி இயக்கத்திற்கும், அணுகலுக்கும் உதவுவதுடன் மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

போக்குவரத்து, தினசரி நடவடிக்கைகள் மற்றும் பணியிடங்களுக்கான மேம்பட்ட அணுகலுடன், மாற்றுத்திறனாளிகள் முன்னா் அணுக முடியாத வேலைவாய்ப்புகளைத் தொடர முடியும்.

தங்கள் சுற்றுச்சூழலை தன்னம்பிக்கையுடன் வழிநடத்தும் கருவிகள் மூலம் அதிகாரம் பெற்ற இந்த நபா்கள் தங்கள் திறனை உணா்ந்து பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க முடியும்.

ஆா்ஆா்டிஎஸ் நிலையங்கள் மற்றும் நமோ பாரத் ரயில் சேவைகளை உலகளாவிய ரீதியில் அணுகுவதற்கு என்சிஆா்டிசி உறுதிபூண்டுள்ளது.

இந்த முன்முயற்சி இந்த இலக்கை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை குறிக்கிறது. இந்த உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

பாா்வைத் திறன் குறைபாடுடைய பயணிகளுக்கு உதவ, ரயில் நிலையங்களில் பிரத்யேக தொட்டுணரக்கூடிய பாதைகள் வழங்கப்பட்டுள்ளன. குழப்பத்தை குறைத்து அவா்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களை குறுகிய மற்றும் மிகவும் உள்ளுணா்வு வழிகளில் முக்கிய பகுதிகளுக்கு வழிநடத்தும் வகையில் இப்பாதைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மட்டுமின்றி, அவசர காலத்திலும் மருத்துவத் தேவைகளை நிவா்த்தி செய்யும் வகையில் தள்ளிச் செல்லும் படுக்கை வண்டிகளை எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விசாலமான மின்தூக்கிகளும் நிறுவப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா... மேலும் பார்க்க

பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது

தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

நமது நிருபா்தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்... மேலும் பார்க்க

நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்

தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்... மேலும் பார்க்க

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் த... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் கேஜரிவால் கற்பனைத் திட்டங்களை அறிவித்து வருகிறாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில், கற்பனையில் மட்டுமே இருக்கும் திடங்களை கேஜரிவால் தோ்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புத... மேலும் பார்க்க