செய்திகள் :

`வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டதுபோல் மோடியும் கடத்தப்படலாம்'- காங்கிரஸ் தலைவர் பேச்சு; பாஜக கண்டனம்

post image

அமெரிக்க படைகள் இரவோடு இரவாக வெனிசுலாவில் ரெய்டு நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்துச்சென்றன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் இருக்கின்றனர். அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கியூபா, கிரீன்லாந்து உட்பட மேலும் சில நாடுகளை பிடிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளார். அதேசமயம் இந்தியா மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்து வருகிறார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள்து.

இந்த வரி விதிப்பு மற்றும் வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ்சவான் பேட்டியளிக்கையில், வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் குறிப்பிட்டு, அதுபோன்ற நெருக்கடி இந்தியா மீதும் வருமா என்று பிருத்விராஜ் சவான் கேள்வி எழுப்பினார்.

``வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவிலும் நடக்குமா? ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திவிடுவாரா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், ``இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி, இந்தியா-அமெரிக்க வர்த்தகத்தை முடக்கிவிடும். நேரடியாகத் தடை விதிக்க முடியாததால், வர்த்தகத்தை நிறுத்த ஒரு கருவியாக வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நமது மக்கள் முன்பு ஈட்டிய லாபம் இனி கிடைக்காது.

நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அந்தத் திசையில் முயற்சிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன,” என்று கூறினார்.

நான் அப்படி சொல்லவில்லை

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா கடத்துவது குறித்து தெரிவித்த கருத்து குறித்து பிருத்விராஜ் சவானிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' ​​அதுபோன்று நான் கருத்து கூறவில்லை. அது போன்று எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்பதே நான் சுட்டிக்காட்ட முயன்ற விஷயம்.

ட்ரம்ப் அண்டை நாடான கொலம்பியாவின் அதிபருக்கும் மிரட்டல் விடுத்தார். அவர் டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தையும், பனாமாவையும் கைப்பற்றுவது குறித்தும் பேசுகிறார். எனவே, இந்த விஷயத்தில் உலகில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு சரிந்தது போலவே, ஐக்கிய நாடுகள் சபையின் முழு அமைப்பும் சரிந்துவிடும்.

எனவே, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால், யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை இது. இந்தியாவுக்கு ஏதேனும் நடக்கும் என்று நான் கூறவில்லை," என்று சவான் விளக்கினார்.

பா.ஜ.க கண்டனம்

பிருத்விராஜ் சவானின் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பூனாவாலா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,''காங்கிரஸ் கட்சியின் இந்திய விரோத கொள்கை அனைத்து எல்லையையும் தாண்டி விட்டது. பிருத்விராஜ் சவானின் கருத்து கண்டிக்கத்தக்கது. சிந்தூர் ஆப்ரேசனின் போது நமது படையை பிருத்விராஜ் சவான் அவமதித்தார். இந்தியாவிற்கு எதிராக காங்கிரஸ் பேசுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது''என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அடுத்த நாளே பிருத்விராஜ்சவான் இது போன்று தெரிவித்துள்ளார். பிருத்விராஜ்சவான் சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 2‘இந்தி எதிர்த்திட வாரீர் – நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்’ என்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

ஹைவேயில் அன்புமணி ; ட்ராஃபிக்கில் ராமதாஸ்; U-Turn போடும் டிடிவி? | தேர்தல் பரபர

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க பரபரப்பாக தன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. 'அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்' எனத் தொடர்... மேலும் பார்க்க