செய்திகள் :

மாலை வெளியாகும் அப்டேட்; தனுஷ் பாடிய ஓப்பனிங் சாங் - பிறந்தநாள் ஸ்பெஷலாக தனுஷ் கொடுக்கும் ட்ரீட்!

post image

நாளை தனுஷின் பிறந்த நாள். முன்னதாக அவர் தனது பிறந்த நாள் ஸ்பெஷலாக ரசிகர் மன்ற விழாவில் பேசியது வைரலாகி வருகிறது. 'ராயன்', 'கேப்டன் மில்லர்' படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த விமர்சன சர்ச்சை உட்பட பலவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேசியிருந்தார். தனுஷின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் சென்னை மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக் கல்லூரியில் தனுஷின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ரசிகர் மன்றம் சார்பில் பேனாவும் பரிசு வழங்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தனுஷின் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விழா நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில் மும்பை, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தனுஷின் ரசிகர்கள் படையெடுத்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்டோக்களும் வழங்கினார்கள். ரசிகர்கள் ரத்த தானமும் செய்திருந்தனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து விசாரித்தோம்.

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் இப்போது 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 55வது படமாக உருவாகி வருகிறது. இதில் அவருடன் மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய்பல்லவி எனப் பலரும் நடித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மம்மூட்டி - தனுஷ் தொடர்பான ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை படப்பிடிப்புக்கு பிரேக் விடுகிறார்கள் எனத் தகவல். படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது. அதன் புரொமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது படத்தின் ஓப்பனிங் பாடல் என்றும், சென்னை ரெட் ஹில்ஸ் அருகே 1500 டான்சர்கள் காம்பினேஷனுடன் இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஓப்பனிங் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.

இது தவிர கடந்த இரண்டு மாதங்களாக சென்னை சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் மதிய உணவு அன்னதானமாக (சிக்கன் பிரியாணி) வழங்கப்பட்டு வருகிறது. தனுஷின் நட்பு வட்டத்தில் உள்ள சமுத்திரக்கனி, வேல்ராஜ் எனப் பலரும் இந்த அன்னதான திட்டத்தைத் தொடங்கி வைத்து வந்தனர். இந்நிலையில் நாளை மட்டும் மூன்று வேளை அன்னதானம் செய்ய உள்ளதாகவும் சொல்கிறார்கள். நாளை தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தகவல்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க