செய்திகள் :

"'மிகவும் உயரமாக இருக்கிறாய்; வீட்டுக்கு போ' என்றார்கள்"- ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன்

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறார். சொந்தமாக படங்கள் தயாரித்து கடுமையான கடனாளியாக மாறி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் பாலிவுட்டிற்கு வந்த புதிதில் தான் சந்தித்த சவால்கள் குறித்து அமிதாப்பச்சன் தான் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

'கோன் பனேகா குரோர்பதி 18' நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சியில், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், ஜந்து குமார், ஷர்மிளா தன்கர் மற்றும் அஸ்மிதா டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் அமிதாப்பச்சன் உரையாடியபோது, ​​"விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது தவறு செய்யும்போதெல்லாம் கடிந்துகொள்ளப்படுவதைப் போலவே, திரைப்படப் படப்பிடிப்புத் தளங்களிலும் அமிதாப் பச்சன் அத்தகைய கண்டிப்புகளை எதிர்கொண்டதுண்டா?" என்று அஸ்மிதா அவரிடம் கேட்டார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

அதற்குப் பதிலளித்த அமிதாப்பச்சன், "நான் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்கள் எனக்கு எதுவும் தெரியாது. நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 'நீ மிகவும் உயரமாக இருக்கிறாய், வீட்டிற்குத் திரும்பு' என்று சொல்வார்கள்.

அப்புறம் எனக்கு படத்தில் வாய்ப்புகள் கிடைத்ததும், அவர்கள், 'சரி, சரி, அங்கே நின்று டயலாக்கைச் சொல்லுங்கள்' என்று சொல்வார்கள். இப்படியா டயலாக் சொல்வார்கள் என்று கேட்டு என்னைத் திட்டுவார்கள், திருத்துவார்கள், மெதுவாக நான் முன்னேறினேன். பொதுவாக, படப்பிடிப்புக்குச் சரியான நேரத்திலேயே செல்ல நான் முயற்சிப்பேன். ஒருமுறை நான் தாமதமாகச் சென்றேன். அப்போது படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே இயக்குநர் நின்றுகொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் என்னிடம் சொந்தமாக கார் இல்லாததால், வேறொருவரின் காரில்தான் நான் அங்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றதும் என்னைப் பார்த்த இயக்குனர், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறினார். இங்கிருந்து கிளம்பு என்று சொல்லி, என்னை அங்கிருந்து செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்," என்று கூறினார்.

Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! - மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்... மேலும் பார்க்க

நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்; ஒரு மாதம் கடந்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்தியத் திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பாலும் உழைப்பாலும் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 35-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியு... மேலும் பார்க்க

``பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது" - அனுராக் காஷ்யப் ஓப்பன் டாக்!

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்ய எந்த விஷயம் குறித்தும் உடைத்துப் பேசுவதற்கு தயங்காதவர். தொடர்ந்து இந்தித் திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக... மேலும் பார்க்க

"உங்க வரம்புக்குள் இருங்க; என் உதவி தேவைப்படலாம்" - மனைவி சுனிதாவுக்கு நடிகர் கோவிந்தா எச்சரிக்கை

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு வேறு ஒரு டிவி நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை பொது இடங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் சுனிதா தெரிவித்து வ... மேலும் பார்க்க

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நம... மேலும் பார்க்க

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க