செய்திகள் :

`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!'- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்

post image

கர்நாடகா மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் உள்ள ஹனாசி என்ற கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் பிரியங்கா என்ற செவிலியரை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தார். மல்யுத்த வீரரான பசவராஜ் திருமணமான சில மாதங்களில் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்த ஆரம்பித்தார். அவர் தனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் சென்று தங்கம் மற்றும் பணம் வாங்கி வரும்படி கூறி அடித்து சித்ரவதை செய்து வந்தார்.

பசவராஜ் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை சேர்ந்த ரேவண்ணா, சுபாஷ் மற்றும் சித்தரமேஷ் ஆகியோரும் பிரியங்காவை அவரது பெற்றோர் வீட்டிலிருந்து பணம் மற்றும் தங்கம் கொண்டு வருமாறு பலமுறை வற்புறுத்தி நெருக்கடி கொடுத்தனர். அதோடு பிரியங்காவின் தோற்றம் மற்றும் உடல் பருமனை காரணம் காட்டி தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி வந்தனர்.

பசவராஜ் தனது மனைவி மிகவும் குண்டாக இருப்பதாகவும், தனக்கு அவர் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் இதே போன்று அவர்களுக்குள் பிரச்னை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பிரியங்காவை பசவராஜ் கடுமையாக அடித்து உதைத்துள்ளார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கழுத்தை நெரித்து பிரியங்காவை கொலை செய்துள்ளார். இது குறித்து இரண்டு நாட்கள் கழித்துதான் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் தங்களது புகாரில், பிரியங்காவை அவரது கணவர் மிகவும் குண்டாக இருப்பதாக அடிக்கடி கேலி செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அவர் ஏன் கர்ப்பமாகவில்லை என்று கேள்வி எழுப்பி துன்புறுத்தியுள்ளார். அதோடு குடும்பத்தினரிடம் பணம் மற்றும் நகைகளை மீண்டும் மீண்டும் வாங்கி வரும்படி கூறி நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.

பிரியங்கா மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் ஒருபோதும் குழந்தை பெற முடியாது என்றும் கூறி, பசவராஜ் தனக்கு பிரியங்காவை பிடிக்கவில்லை என்று சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு முறை கர்ப்பம்

ஆனால் உண்மையில் பிரியங்கா இரண்டு முறை கர்ப்பமானார் என்று பிரியங்காவின் மாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''திருமணத்திற்குப் பிறகு இரண்டு முறை கருத்தரித்ததார். ஆனால் அவரது கணவர் மீண்டும் மீண்டும் உடல் ரீதியாகத் தாக்கியதால் கருச்சிதைவு ஏற்பட்டது. எனக்கு அவளைப் பிடிக்கவில்லை, அவள் குண்டாக இருக்கிறாள், குழந்தைகளைப் பெற முடியாது" என்று பசவராஜ் சொல்லிக்கொண்டே இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்'' என்று கோரினார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பசவராஜ் வத்தர், ரேணவ்வா, சுபாஷ், சித்தரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க