Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர...
மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான்.
அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார்.
அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே.

'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம்
இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம்.
இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும்.
இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான்.
இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும்.
















