செய்திகள் :

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

post image

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது.

இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மையத்தின் துணை அதிபரான டாக்டர். கியூடோ சில்வெஸ்டரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி வேந்தரின் தற்போதைய ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர். S. P. தியாகராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தரான டாக்டர். C. ஸ்ரீதர், தொற்று நோய்களாலும் மற்றும் தொற்றா நோய்களாலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சுட்டிக் காட்டி இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கான தேவையையும் நோக்கத்தையும் தெளிவுரைத்தார்.

இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான வேந்தர் திருமதி. ஜெயந்தி இராதாகிருஷ்ணன், தலைமை புரவலர் திருமதி. கோமதி இராதாகிருஷ்ணன் மற்றும் சார்பு வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை பற்றியும் அறிவியல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை நடத்த அவர்களின் முனைப்பைப் பற்றியும் அடிகோடிட்டார்.

இந்த கருத்தரங்கம் நான்கு அறிவியல் அமர்வுகளை உள்ளடக்கியது. அதில் 14 அறிவியல் வல்லுநர்கள் தங்கள் அறிவியல் கருத்துகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். எய்ட்ஸ், காச நோய், வைரஸ் சார்ந்த புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க தடுப்பு ஊசி தயாரிப்புகளில் இன்று நடக்கும் ஆராய்ச்சிகளை பற்றியும் அதை சார்ந்த மரபணு மாற்றங்களை பற்றியும் இந்த கருத்தரங்கில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.


தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு நடத்தியது.

இந்த கருத்தரங்கை நடத்தியதன் மூலம் மருத்துவ கல்வியிலும், ஆராய்ச்சியில் உள்ள புதுமைகளை அறிவதிலும், உலக அறிவியல் ஈடுபாடுகளிலும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்புகள் வெளிப்படுகிறது.

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தத... மேலும் பார்க்க