செய்திகள் :

``முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" - பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ``இன்றைக்கு சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை முழுவதும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமே அமைந்திருந்தது.

ஆளுநர் அர்லேகர்
ஆளுநர் அர்லேகர்

தற்போதைய சூழலில் மாநிலத்தில் நடந்து வரும் முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து அதில் இல்லை. கடந்த ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் முழுக்க முழுக்க ஆட்சியாளர்களுக்குத் தகுந்தாற்போலவே வடிவமைக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதையும், இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம்; அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த உரை ஆளும் தரப்பிற்கு மட்டுமே ஆதரவான ஒரு உரையாக மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆளுநர் உரையின் பிற அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும் தே.மு.தி.க-வின் விரிவான அவதானிப்புகளையும், கருத்துகளையும் நாளை செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகவும் விளக்கமாகவும் வெளியிடுவேன்" என்றார்.

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' - சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் ... மேலும் பார்க்க

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க

`3 ஆண்டுகளுக்குப் பிறகு... சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்!' - ஆளுநர் ஆரலேகர் பெருமிதம்

முந்தைய ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக- அரசுக்கும் இடையே இருந்த அதிருப்தி சூழல்களால், 'ஆளுநர் உரை' என்றாலே தமிழ்நாடு அரசியல் களம் உன்னிப்பாக கவனிக்கும். இந்த சூழலில் இன்று மாநிலப் பொறுப்பு ஆ... மேலும் பார்க்க

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க