செய்திகள் :

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியம்... எப்படி தெரியுமா?

post image

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியமா?


ஆம்! இது சாத்தியமே.

பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதம் ₹20,000 முதலீடு செய்து, அதை ஆண்டுக்கு ₹1,500 வீதம் ஸ்டெப் அப் (Step-Up) செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த முதலீட்டுக்கு சராசரியாக 12%  வருமானம் கிடைத்தால், சுமார் 12 ஆண்டுகளில் ₹1 கோடி சேர்க்க முடியும்.

இது எப்படி சாத்தியம்? இதன் ரகசியம் டாப் அப் எஸ்.ஐ.பி முறைதான்.

எஸ்.ஐ.பி SIP
கௌஷிக் கேதாரம், நிறுவனர், www.intelli360.in

டாப் அப் எஸ்.ஐ.பி என்றால் என்ன?

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, உங்கள் மாத எஸ்.ஐ.பி தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை அல்லது சதவீதம் உயர்த்துவது ஆகும்.
உதாரணமாக:

  • 1 -ம் ஆண்டு: மாதம் ₹20,000

  • 2 -ம் ஆண்டு: மாதம் ₹21,500

  • 3 -ம் ஆண்டு: மாதம் ₹23,000

  • … இப்படி ஆண்டுக்கு ₹1,500 வீதம் அதிகரித்தல்.

உங்கள் வருமானம் வருடா வருடம் உயர்வதைப் போல, உங்கள் முதலீட்டையும் உயர்த்துவதால், கூட்டு வளர்ச்சியின் பலன் மிக வேகமாக செயல்படத் தொடங்குகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி

₹1 கோடி+ எப்படி உருவாகிறது?

  • ஆரம்ப எஸ்.ஐ.பி: ₹20,000 / மாதம்

  • ஆண்டுக்கு டாப் அப் எஸ்.ஐ.பி: ₹1,500

  • காலம்: 12 ஆண்டுகள்

  • எதிர்பார்க்கும் வருமானம்: ஆண்டுக்கு சராசரியாக 12%

  • முதலீடு ஒவ்வொரு மாதமும் செய்யப்படுகிறது

டாப் அப் எஸ்.ஐ.பி – விளக்க அட்டவணை

டாப் அப் எஸ்.ஐ.பி

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

முக்கிய குறிப்புகள்

  • வருமானம் உத்தரவாதம் அல்ல: 

  • ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் என்பது எதிர்பார்ப்பு மட்டுமே. பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து வருமானம் கூடலாம் அல்லது சிறிது குறையலாம்.

  • நீண்ட கால நோக்கம் அவசியம்:

  • எஸ்.ஐ.பிமற்றும் டாப் அப் எஸ்.ஐ.பி இரண்டுமே நீண்ட கால முதலீட்டில் தான் சிறந்த பலன் தரும்.

  • ஒழுங்கு தான் வெற்றி: 
    எஸ்.ஐ.பி. முதலீட்டை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே முக்கியம்.

நிறைவாக,மாதம் ₹20,000 என்ற தொகை பெரியதாகத் தோன்றலாம். ஆனால், ஆண்டுக்கு ₹1,500 என்ற சிறிய உயர்வு மூலம், 12 ஆண்டுகளில் ₹1 கோடி தொகையை உருவாக்குவது சாத்தியமாகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, அதிக சம்பளம் வரும் போது, அதிக செல்வம் உருவாக்கத் தொடங்க ஒரு புத்திசாலித்தனமான வழிமுறை ஆகும்.

தங்கமா, பங்குச் சந்தையா... எதில் முதலீடு செய்தால் லாபம்? - வாங்க தெரிஞ்சிக்கலாம்!

பலருக்கும் எதில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்ற கேள்வி இருக்கிறது. தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் இருக்கும் சூழலில், ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஃபண்டுகளைவிட தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! - தங்கம் இனியும் லாபம் தருமா?

ஆங்கிலத்தில் 'Euphoria' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதீத உற்சாகம் என்று இதனைத் தமிழ்ப்படுத்தலாம். இந்த அதீதமான உற்சாக நிலை வந்துவிட்டால் போதும், மக்கள் தலைகால் புரியாமல் செயல்படத் தொடங்குவார்கள். அ... மேலும் பார்க்க

கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்!

நீங்கள் 50 வயதைக் கடந்தவரா? ரிட்டயர்மென்ட் பணமாகஒரு பெரிய தொகை கையில் இருக்கிறதா? அல்லது வரப்போகிறதா? வயதான காலத்தில் மருத்துவச்செலவுகள்தான்உங்களதுபெரிய பிரச்னை என்று நினைப்பீர்கள்.ஆனால், தமிழ்நாட்டுப... மேலும் பார்க்க

அன்று 2,000 கோடி கடன், பாக்கெட் காலி; ஆனால் இன்று..! - எலான் மஸ்க்கின் வாழ்க்கைப் பாடம்

2008-ம் ஆண்டு. உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரம். ஆனால் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உலகம் அதைவிட மோசமாகச் சிதைந்து கொண்டிருந்தது. பொறியில் மாட்டிய எலியாய், மஸ்க் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் ... மேலும் பார்க்க

Personal Finance: பிசினஸ் லாபத்தில் கோடிகளை உருவாக்குவது எப்படி? 5.6 கோடி ரகசியம் தெரியுமா?

தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல வெற்றியாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். "பிசினஸ் எப்படிங்க போகுது?" என்று கேட்டால், "சூப்பரா போகுதுங்க! போன வருஷத்த விட டர்ன் ஓவர் டபுள்!" என்று உற்சாகமாகச் சொல்வார்க... மேலும் பார்க்க

லாபம் தரும் முதலீட்டுக்கு உதவும் அஸெட் அலொகேஷன்! - கற்றுக்கொள்ளத் தயாரா?

தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் இவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பதுதான் அஸெட் அலொகேஷன் ஃபார்முலா. நம்முடைய ரிஸ்க்கை அறிந்து, இலக்குகளை வெற்ற... மேலும் பார்க்க