செய்திகள் :

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" - நயினார் நாகேந்திரன் பாராட்டு

post image

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது.

இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சரத்குமார் பிறந்தநாள் விழா
சரத்குமார் பிறந்தநாள் விழா

நிகழ்ச்சி மேடையில் பேசிய நயினார் நாகேந்திரன், "சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான்.

மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதைப் பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த மேடை இதே மாதிரி இருந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும்? இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சிலர் எடுத்த எடுப்பில் முதலமைச்சராகி விடுகிறார்கள். இப்போது கலிகாலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சராக அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன.

சரத்குமார் பிறந்தநாள் விழா
சரத்குமார் பிறந்தநாள் விழா

இங்கு யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு நயா பைசா இல்லாமல் தேசிய கட்சியில் சரத்குமார் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

நிச்சயமாக தேசிய அளவிலான பதவிகள் அவரைத் தேடி வரும். லட்சக்கணக்கான மக்களைக் கொள்ளை கொண்டவர். ஒரு சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ரசிகர் என்று கூறினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று பேசியிருக்கிறார்.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்... மேலும் பார்க்க

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்... மேலும் பார்க்க

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரம... மேலும் பார்க்க

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறத... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்... மேலும் பார்க்க