செய்திகள் :

"முதல்வர் விஜய்க்கு திரைத்துறையினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது" - இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

post image

வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், "முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட மஞ்சுவிரட்டு
வட மஞ்சுவிரட்டு

திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா திரைத்துறைகள் மேம்பட்டு இருக்கின்றன. அங்குள்ள நடிகர்கள் முதலில் கதையைத் தேர்வு செய்வார்கள், பிறகு அதற்குண்டான பட்ஜெட்டைக் கேட்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகாக வரக் கூடிய லாபத்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொள்வார்கள். நம்முடைய நடிகர்கள் அப்படி இருப்பதில்லை.

ஏனெனில் திரைப்படம் எடுக்கின்ற எனக்கும், பேரரசுக்கும் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. எழுத்தாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் தங்களுடைய கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைப்பார்கள்.

திரைத்துறையினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. அதனால்தான் இயக்குநர் சங்கத்தில் இருந்து நாங்கள் அவரைச் சந்திக்கும் போது எந்தவிதமான கோரிக்கையும் முன் வைக்கவில்லை.

இயக்க்குநர் ஆர்.வி உதயகுமார்
ஆர்.வி உதயகுமார்

அவருக்கு எது நல்லது, கெட்டது என்பது தெரியும். அவரே நிச்சயம் செய்வார் என நாங்கள் நம்புகிறோம். திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், திரையரங்குகளில் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்.

மும்பை போன்ற பெரிய நகரங்களில் கூட 70, 80 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளுக்கும் வர வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று பேசியிருக்கிறார்.

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க

பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,``பிறந்த... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.டபுள் ஆக்குபென்சி - தமிழ்குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்... மேலும் பார்க்க

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க