செய்திகள் :

முதல்வர் விஜய் கரூர் விசிட்; இறந்த 41 பேர் குடும்பங்களுடன் சந்திப்பு... அரசு பணி? பிரமாண்ட கூட்டம்!

post image

தமிழக முதல்வரும், த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய், வருகின்ற 10-ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக த.வெ.க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

inspection

இந்த நிகழ்ச்சிக்காக கரூர், வெண்ணைமலை அடுத்துள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின் படி 5,000 பேர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் 5,000 பேர் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகளே செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அன்பு, காவல்துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் சார்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5,000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைத்தல், மக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை விளக்கிக் கூறினர்.

ஆய்வு

முன்னதாக, கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் விஜய் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 41 பேர் பலியான சம்பவம், தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் சூழலில், முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க