சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் குருசாமி (67). இவரது மனைவி செல்வவடிவு (65). இவா்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குருசாமி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இதனால், மனமுடைந்த அவா் தென்காசி சாலையில் தனியாா் திருமண மண்டபம் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.