செய்திகள் :

முதுமலை: 391 இடங்களில், 782 ஆட்டேமெட்டிக் கேமராக்கள் - டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு!

post image

தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம் , கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வன உயிர் சரணாலயம் ஆகிய வனங்களை உள்ளிடக்கிய பகுதியே உலக அளவில் வங்கப் புலிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

கண்காணிப்பு கேமிரா பொருத்தம்

ஒருங்கிணைந்த இந்த வனப்பரப்பில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தாலும், காடு போதாமை, மனித செயல்பாடுகள், பெருகி வரும் களைத் தாவரங்கள் போன்றவை பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிகளின் அடிப்படையில் புலிகள் காப்பகங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி

ஒவ்வொரு புலியையும் அதன் பிரத்யேக வரிகளைக் கொண்டு அடையாளம் காண்பதுடன் எண்கள் அடிப்படையில் அடையாளம் சூட்டி தரவுகளை டிஜிட்டல் முறையில் பரமாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2026 - ம்‌ ஆண்டுக்கான ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

கண்காணிப்பு கேமிரா பொருத்தம்

டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 391 இடங்களை தேர்வு செய்து 782 ஆட்டேமெட்டிக் கேமராக்களை பொருத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 30 நாள்களில் இந்த கேமராக்களில் பதிவாகும் புலிகள் அடையாளம் கண்டு அதன் தரவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளனர். இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி அதன் வாழிட எல்லை, இணை, உடல்நிலை உள்ளிட்ட பல தரவுகளையும் துல்லியமாக அறிய என்கிறது முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம்.

புதுச்சேரி: நகரப் பகுதியில் ஓய்வெடுக்கும் பழம்தின்னி வவ்வால்கள்! | Photo Album

மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால... மேலும் பார்க்க

சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு வி... மேலும் பார்க்க

தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை... மேலும் பார்க்க

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது ... மேலும் பார்க்க

`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெர... மேலும் பார்க்க

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு மேலும் பார்க்க