செய்திகள் :

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து இறங்குவதில் தகராறு; கல்லூரி பேராசிரியரை குத்திக் கொன்ற சக பயணி!

post image

மும்பையில் புறநகர் ரயில்தான் மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சாதாரண மக்களால் முடியாத காரியம். ரயிலில் ஏறுவதாக இருந்தாலும், இறங்குவதாக இருந்தாலும் அதற்கு கடுமையாக போராட வேண்டும். அதோடு பயணிகள் ரயிலில் இருக்கையில் அமர்வது தொடர்பாக அல்லது ரயில் வாசலில் நிற்பது தொடர்பாக, ரயிலில் ஏறுவது தொடர்பாக தினம்தினம் ஏதாவது சண்டை வந்து காவல் நிலையம் வரை செல்லும் சம்பங்களும் நடக்கிறது.

பேராசிரியர் படுகொலை

தற்போது புறநகர் ரயிலில் ஒரு கல்லூரி பேராசிரியர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை புறநகர் ரயிலில் அலோக் சிங்(33) என்பவர் விலே பார்லே என்ற இடத்தில் ஏறினார். அவர் மலாடு ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ஆனால் ரயில் மலாடு ரயில் நிலையம் அருகில் வந்தபோது அவர் இறங்க முயன்றபோது சக பயணியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணி அலோக் சிங் ரயிலில் இருந்து இறங்குவதற்கு இடையூறாக நின்று கொண்டிருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென சக பயணி தன்னிடம் இருந்த கத்தியால் அலோக் சிங்கை குத்திவிட்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அலோக் சிங் உடனே ரயிலில் இருந்து கீழே இறங்கிவிட்டார். அவர் தனது கையால் ரத்தத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அவர் முடியாமல் அப்படியே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

உடனே அவரை ரயில்வே போலீஸார் காந்திவலி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கொண்டு சென்றபோதே இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் அலோக் சிங் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர். அலோக் சிங் விலேபார்லேயில் உள்ள நர்சி மோன்ஜி கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். அங்கு அவர் கணித பாடம் எடுத்து வந்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவம் நடந்த அன்று, கத்தியால் குத்திய நபரை பார்த்த மற்றும் வாக்குவாதத்தை ரயிலில் நேரில் பார்த்த சாட்சிகள் எங்களிடம் உள்ளனர். நாங்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறோம். மலாடு மற்றும் முந்தைய ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாள காண முயன்று வருகிறோம் துப்பு கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகிறோம்.

கத்திக்குத்து மிகவும் ஆழமாக இருந்தது.'' என்று தெரிவித்தனர். அலோக் சிங்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அலோக் சிங் மிகவும் அமைதியானவர் என்றும், எந்த சண்டைக்கும் செல்லக்கூடியவர் கிடையாது என்றும் அவர் பணியாற்றிய கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அலோக் சிங்கின் தந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

பெரம்பலூர்: போலீஸ் கஸ்டடியில் இருந்த ரௌடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! - 3 போலீஸார் காயம்

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி. இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதவிர, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வேறு ச... மேலும் பார்க்க

சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை

ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண் தனது சகோதரனின் உத... மேலும் பார்க்க

`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!

குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்த... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க