செய்திகள் :

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

post image

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலில் இருந்து 5 பேர் கீழே விழுந்து இறந்தது தொடர்பாக மத்திய ரயில்வே பொறியாளர்கள் இருவர்மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் மோட்டார்மேன்களின் அறைக்கு வெளியே ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்

இதனால் மோட்டார்மேன்கள் வெளியில் செல்ல முடியவில்லை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் கூட்டம் கடுமையாக இருக்கும்.

அப்படிப்பட்ட நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பித்தது. சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மஜித் பந்தர், டாக்யார்ட் ரோடு ரயில் நிலையங்களில் ரயில்கள் ஆங்காங்கே நின்றதால், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் ரயில்வே போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

மத்திய ரயில்வே உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மண்டல ரயில்வே மேலாளர் ஹிதேஷ் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தால் நிலைமை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, போராட்டத்தை கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாலை 6.40 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

மும்பை ரயில் நிலையம்
மும்பை ரயில் நிலையம்

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட விஜிதா நிதேஷ் என்ற பயணி இதுகுறித்து கூறுகையில், “எந்த வித அறிவிப்பும் இல்லை. ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தால், அவர்களது அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தலாம். இந்த அளவுக்கு பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

ரயில் போக்குவரத்து நின்றதால், சாண்டர்ஸ்ட் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு புறநகர் ரயில் பயணிகள் மீது மோதியது.

இதில் சூர்யகாந்த் மற்றும் ஹெய்லே என்ற இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். தானே ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் கடுமையாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால், தானேயிலிருந்து கர்ஜ் நோக்கி ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்... மேலும் பார்க்க

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் க... மேலும் பார்க்க