செய்திகள் :

மும்பை ரயில் தண்டவாளத்தில் பட்டப்பகலில் போர்வை மூடி உறங்கிய போதை ஆசாமி! - ரயில் சேவை பாதிப்பு

post image

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் மட்டுமல்லாது மும்பை ரயில் நிலையங்களிலும் காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மத்திய ரயில்வே புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது.

நேற்று மாலை 3 மணிக்கு பன்வெலில் இருந்து புறநகர் ரயில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் நுழைய வந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேசனில் பிளாப்பாரம் தொடங்கும் இடத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் வெள்ளை துணியை மூடியபடி படுத்திருந்தார்.

பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் தண்டவாளத்தில் படுத்திருந்தவரை எழுந்திருக்கும்படி கூறி கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் அந்த நபர் நிம்மதியாக படுத்திருந்தார்.

இதனை தூரத்தில் இருந்தே கவனித்த ரயில்வே மோட்டார்மென் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது ரயில் ஏறுவதற்குள் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். அவரது தலை அருகில் ரயில் வந்து நின்றது. சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் துணி மூடிபடுத்திருந்த நபரை துணியை நீக்கி பார்த்தபோது அந்த நபர் போதையில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அவரை எழுப்பியபோது அவரால் குடிபோதையில் எழுந்திருக்க முடியவில்லை. ரயில்வே போலீஸார் அவரை சம்பவ இடத்தில் இருந்து போராடி இழுத்துச்சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பட்டப்பகலில் எப்படி அவர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி படுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் தினமும் புறநகர் ரயில்களில் இருந்து விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு 10 பேர்வரை உயிரிழந்து வருகின்றனர்.

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க

ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் வி... மேலும் பார்க்க

வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்

பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக... மேலும் பார்க்க

AC: வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி?

சொட்டச்சொட்ட வியர்க்கும் அளவுக்கு அனலாகக் கொளுத்தப் போகிறது கோடை வெயில். மின்விசிறிகளே சுழன்று சுழன்று களைத்திருக்கும் இந்த வேளையில், பலரும் எதிர்பார்ப்பது ஒரு ஜில்-ஜில் ஏ.சி-யைத்தான். ஆனால், ஒரு மின்... மேலும் பார்க்க

விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர் நாடியாக இருக்கிறது. அந்த ரயிலில் ஆண்களுக்கு நிகராக தினமும் ஆயிரக்கணக்கான பெண்களும் பயணம் செய்கின்றனர். அவர்கள் மும்பை புறநகர் பகுதியில் இருந்து தினமும் மும்பைக்... மேலும் பார்க்க

ஊழியர்களுக்கு கார், வீடு கொடுத்து மகிழும் சூரத் வைர வியாபாரி - ரூ.12ஐ 15,000 கோடியாக்கியது எப்படி?

குஜராத் மாநிலத்தில் வைரம்தான் பிரதான தொழில். பெரும்பாலான தொழிலதிபர்கள் சூரத்தில் வைரத்தை பட்டை தீட்டி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சூரத் இந்தியாவின் `வைர நகரம்' என்று அழைக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க