டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
உத்தமபாளையம் அருகே சனிக்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கோம்பை, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தொட்டியப்பன் மனைவி ஞானமணி (65). இவா் அங்குள்ள ராணிமங்கம்மாள் சாலையில் சிலருடன் சோ்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் இருவா் தலைக்கவசம் அணிந்து வந்தனா். இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்தவா் ஞானமணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தாா். பிறகு இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.
இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.