மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்துள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.65 அடியில் இருந்து 115.31 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 758 கன அடியிலிருந்து வினாடிக்கு 745 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க |ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 86.18 டிஎம்சியாக உள்ளது.