செய்திகள் :

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

post image

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.

பேரணியில் பேசிய மோடி, " மதுராபூர், டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

உங்கள் வருகையே உங்கள் முடிவை உணர்த்திவிட்டது. மே 4 ஆம் தேதி வெளியாகப்போவது வெறும் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல. ஒரு மாற்றம் நிகழும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்.

மேற்கு வங்காளம் முழுவதும் ஒரு மாற்றத்துக்கான அலை வீசுகிறது. முதல் கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக பெண்களும் இளைஞர்களும் வாக்களித்த விதத்தை நாடு முழுவதும் பார்த்து வருகிறது.

இன்னும் 10 நாள்களில் வாக்குகள் எண்ணப்படும்போது, தாமரை எங்கும் மலரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது மாற்றத்துக்கான சரியான நேரம். வங்காளத்தின் இரக்கமற்ற அரசைக் கவிழ்க்க இதுவே சரியான தருணம் என்று வங்காள மக்களிடம், குறிப்பாக எனது முதல் முறை வாக்காளர்களிடம், கூறுகிறேன். இதுவே உகந்த நேரம்.

நம் அனைவரையும் ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தாய்மார்களும் சகோதரிகளும் இங்கு கூடியிருப்பது, திரிணாமுல் காங்கிரஸின் தூக்கத்தைக் கெடுக்கும். திரிணாமுல் காங்கிரஸ் வங்காளப் பெண்களின் உரிமைகளை அபகரித்துள்ளது.

வங்காளம் துர்கா தேவியை வழிபடும் பூமி. திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை பெண்களின் கண்ணியத்தை அவமதித்து, அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்துள்ளது. உங்களின் ஒரே ஒரு வாக்கு, இதற்காக அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்" என்று பேசிய மோடி பாஜகவின் பெண்களுக்கான வாக்குறுதிகளையும் அறிவித்தார். அதன்படி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

* பெண் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்க 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

* அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி.

* பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்தல்.

* பெண்களுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

* சுய உதவிக்குழுக்கள் மூலமாக பெண்களுக்கு அதிக கடன் வசதி மற்றும் தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

* மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி அதிரடி படை மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

* ஒரு லட்சம் பெண்களுக்கு நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

* பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் பெண்களுக்கு வீடு வழங்கப்படும்.

* முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தரப்படும்" என்று வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

``மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்... ஏனென்றால்" - ப.சிதம்பரம் சொல்லும் விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காரைக்குடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டு மக்கள் மீண... மேலும் பார்க்க

தமிழகத் தேர்தல் களம்: எடப்பாடியில் வாக்குப்பதிவு சாதனை; ஸ்டாலின், விஜய், சீமான் தொகுதிகளின் நிலவரம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகளில் மாலை 5 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப... மேலும் பார்க்க

சேலம் 88%, ஈரோடு 87%... மாலை 5 மணிக்கே உச்சம் தொட்ட வாக்கு சதவிகிதம்! காரணம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிகத்து வர... மேலும் பார்க்க

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொ... மேலும் பார்க்க

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடி... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க