செய்திகள் :

மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சீமைராஜா. கடந்த ஜூலை 4-ல் மேலூர் காவல் ஆய்வாளர், என் மகன் சீமைராஜாவைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எதற்காகத் தேடுகிறீர்கள் எனக் கேட்ட போது மேலூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக மகனைத் தேடுவதாகக் கூறினார்.

ஜூலை 6-ம் தேதி காலை 9 மணி அளவில் மேலூர் காவல் ஆய்வாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலை விபத்தில் சீமைராஜா இறந்து விட்டதாகவும், அவர் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் சென்று பார்த்தபோது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. சீமைராஜவுடன் சென்ற மற்றொரு நபரான சூர்யாவைச் சந்திக்க போலீஸார் அனுமதிக்க மறுக்கிறார்கள். என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகனின் உடலை மூத்த தடயவியல் நிபுணர் குழுவை வைத்து உடற்கூறாய்வு செய்யவும், உடற்கூறாய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும், மேலூர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

சீமைராஜா
சீமைராஜா

இம்மனுவை நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி விசாரித்தார். அரசு தரப்பில், 'சாலை விபத்தில் உயிரிழந்தவருடன் சென்ற நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் அவரது வழக்கறிஞருடன் சென்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரைப் பார்த்து பேசவும், பின்னர் தேவை எனில் இவ்வழக்கைத தொடர்ந்து நடத்தலாம்' எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க